நீண்ட காலமாக சேவையாற்றும் ஊழியர்களை யூனியன் வங்கி கௌரவிப்பு

யூனியன் வங்கியில் நீண்ட காலமாக சேவையாற்றும் ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றை வங்கி அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. கடந்த காலங்களில் வங்கியின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி, சேவைகளை வழங்கி வங்கியில் இருபது மற்றும் இருபத்தைந்து வருட கால சேவையை பூர்த்தி செய்த பத்து ஊழியர்களுக்கு கௌரவிக்கப்பட்டனர். யூனியன் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்ரமசிங்க இவர்களுக்கான நினைவுச்சின்னங்களை கையளித்திருந்ததார். வங்கியின் வருடாந்த Dinner Dance நிகழ்வின் போது இந்த கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

வருடாந்தம் கொண்டாடப்படும் இந்த நிகழ்வு தொடர்பாக மனித வளங்கள் பிரிவின் உப தலைவர் லிலந்தி தெல்கொட கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஊழியர்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் வங்கியில் பல வருடங்களில் இயங்கியுள்ளதுடன், வங்கியின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திலும் பங்களிப்பு செய்துள்ளனர். வங்கியின் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் சாதனைப் பயணத்தில் இவர்களும் அங்கம் வகிக்கின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பு, பணியாற்றுவதற்கு தெரிவுக்குரிய வங்கி எனும் கீர்த்தி நாமத்தை கொண்டிருப்பதற்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. யூனியன் வங்கி அணியில் இணைந்து கொள்ளும் சகல புதிய அங்கத்தவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது. எமது சகல நீண்ட கால சேவை விருதை பெற்றுக் கொள்வோருக்கும் நான் நன்றி தெரிவிப்பதுடன், வங்கியில் அவர்களின் எதிர்கால செயற்பாடுகளுக்கு நல்வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன்.” என்றார்.

இருபத்தைந்து வருட கால சேவை பூர்த்திக்கான கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டவர்களில் இந்திக கலஹிட்டியாவ – உதவி முகாமையாளர் கண்டி கிளை, சந்தித்த லியனகே – கிளை முகாமையாளர் அங்குனுகொலபெலஸ்ஸ கிளை, ஹிரான் டி சில்வா – வசூலிப்பு மீட்டல்கள் முகாமையாளர், சைலஜா நடராஜா – சிரேஷ்ட முகாமையாளர் – திறைசேரி, கிறிஸ்டெலா சிவபிரகாசம் – எலைட் சென்ரரின் தலைமை அதிகாரி, ஹிரான விதானராச்சி – கிளியரிங் செயற்பாடுகளுக்கான அதிகாரி மற்றும் காஞ்சன டி சில்வா – சிரேஷ்ட முகாமையாளர் – வர்த்தக செயற்பாடுகள் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

இருபது வருட கால சேவை பூர்த்திக்கான கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டவர்களில், ரங்கிக ஏக்கநாயக்க – கிளை முகாமையாளர், நுகேகொட, சர்மா சக்திதரன் – சிஸ்டம்ஸ் மற்றும் நெட்வேர்க் அட்மினிஸ்ட்ரேஷன் சிரேஷ்ட முகாமையாளர் மற்றும் ரங்கி மதுசங்க ஜயதிலக – சிரேஷ்ட தர உறுதிப்படுத்தல் பொறியியலாளர் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

மனித வளங்கள் முகாமைத்துவம் என்பது வங்கியினால் முக்கியத்துவமளிக்கப்படும் தந்திரோபாய ரீதியில் முன்னிலையில் திகழும் பிரிவாகும். வெகுமதிகள் நிறைந்த தொழில்நிலைகளை கட்டியெழுப்புவதற்காக இந்தப் பிரிவு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதுடன், ஊழியர்களில் அக்கறை கொண்ட நிறுவனமாக திகழச் செய்வதற்காகவும் பணியாற்றுகின்றது. வினைத்திறனான முகாமைத்துவ கட்டமைப்புகள் மற்றும் கவர்ச்சிகரமான வெகுமதித் திட்டங்கள் போன்றவற்றிலிருந்து முன்னேற்றகரமான தொழில்நிலை விருத்தியுடன் பயிலல் மற்றும் விருத்தி வாய்ப்புகள் போன்றனவும் வழங்கப்படுகின்றன. ஊழியர்களுக்கு தமது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி உயர்ந்த ஸ்தானத்துக்கு செல்வதற்கான வாய்ப்புகளை யூனியன் வங்கி வழங்குவதுடன், வினைத்திறன் அடிப்படையில் செயலாற்றும் நிறுவனமாகவும் திகழ்கின்றது. ஊழியர்களை தமது உச்ச வினைத்திறன் மட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக வங்கி தொடர்ந்தும் கவனம் செலுத்துகின்றது.

படம்: யூனியன் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்ரமசிங்க மற்றும் மனித வளங்கள் பிரிவின் உப தலைவர் லிலந்தி தெல்கொட ஆகியோர் வங்கியில் நீண்ட காலமாக பணியாற்றுகின்றமைக்காக கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டவர்களுடன் காணப்படுகின்றனர்.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC