தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சியின் (NEDP) மூன்றாம் கட்டத்தின் அங்கமாக, நிகழ்ச்சியில் பங்கேற்போருக்காக யூனியன் வங்கி அண்மையில் பயிற்சிப்பட்டறை ஒன்றை தனது தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்தப் பயிற்சிப்பட்டறையில் நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த ஆர்வமுள்ள தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றதுடன், இதில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அடங்கியிருந்தனர். யூனியன் வங்கி அணி அங்கத்தவர்களால் இந்த அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பங்குபற்றுனர்களுக்கு தொழிற்துறை செயன்முறைகள் மற்றும் வியாபார செயன்முறைகள் பற்றிய பெறுமதி வாய்ந்த உள்ளார்ந்த தகவல்களை வழங்கியிருந்தன. வியாபார வளர்ச்சி மற்றும் நிலைபேறாண்மை போன்றவற்றுக்கு அவசியமான முக்கிய பகுதிகளான வணிக சேவைகள், நிதியிடல் மற்றும் சட்டபூர்வ அம்சங்கள், செயற்பாடுகள் போன்றன உள்வாங்கப்பட்டிருந்தன.
யூனியன் வங்கியின் சமூக தொழில்முயற்சியாண்மை பாடசாலையின் முக்கிய அங்கமாக NEDP அமைந்திருப்பதுடன், மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவரமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றது. தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வியாபார உரிமையாளர்களுக்கு அறிவு, புத்தாக்கம், தொழில்னுட்ப நிபுணத்துவம் மற்றும் நிதிசார் ஆதரவு ஆகியவற்றை வழங்கி, அவர்களின் வியாபார சிந்தனையை நடைமுறைச் சாத்தியமானதாக மாற்றியமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
படம்: யூனியன் வங்கி பிரதிநிதிகள் மற்றும் NEDP நிகழ்ச்சிப் பங்குபற்றுனர்கள், பயிற்சிப் பட்டறையின் நிறைவின் போது காணப்படுகின்றனர்.

