பெண்களுக்கு நட்பான பணியிடமாக யூனியன் வங்கி கௌரவிப்பு

பெண் முகாமையாளர்களை கட்டியெழுப்பும் தொடர்ச்சியாக முயற்சிகளுக்காக யூனியன் வங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Satyn CIMA பெண்களுக்கு நட்பான பணியிடங்கள் விருதுகள் 2023 நிகழ்வின் போது இந்த கௌரவிப்பு யூனியன் வங்கிக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதினூடாக, பெண்களுக்கு வலுவூட்டும் சமத்துவமான தொழில் வாய்ப்பு வழங்குநர் எனும் வங்கியின் நிலை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனித வளங்கள் பிரிவின் உப தலைவர் லலிந்தி தெல்கொட கருத்துத் தெரிவிக்கையில், “பன்முகப்படுத்தப்பட்ட பணியாளர்களில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், பெண்களுக்கு நட்பான பணியிடச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதனூடாக, வளர்ச்சிக்கும், வெற்றிகரமான செயற்பாட்டுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன், பாதுகாப்பான சூழல் வழங்கப்படுவதும் உறுதி செய்யப்படுகின்றது. பெண்களுக்கு அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக அமைந்துள்ள சகல தடைகளையும் தகர்த்து, முன்னேறுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். ஒவ்வொரு பெண் ஊழியரினதும் கருத்துக்களுக்கு செவிமடுக்கும், பெறுமதியளிக்கும் மற்றும் கொண்டாடப்படும் கலாசாரத்தை நாம் கொண்டுள்ளோம். எமது பணியாளர் குழுவில் சுமார் 45% பெண் பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ளோம். சகல பிரிவுகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் காணப்படுவதுடன், அதில் சிலர் முக்கியமான நிர்வாகப் பொறுப்புகளையும் வகிக்கின்றனர். அதன் மூலமாக, பெண் தலைமைத்துவதினூடாக, பணியாளர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்குவதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

படம்: மனித வளங்கள் பிரிவின் உப தலைவர் லிலந்தி தெல்கொட, திறன் விருத்தி மற்றும் ஈடுபாட்டு பிரிவின் பிரதம தலைமை முகாமையாளர் விசல் ரூபாசிங்க, திறன் விருத்தி மற்றும் ஈடுபாட்டு பிரிவின் உதவி முகாமையாளர் தினிதி பெரேரா, ஆட்சேர்ப்பு மற்றும் வளங்கள் திரட்டல் சிரேஷ்ட முகாமையாளர் தேவானி கோனரா மற்றும் மனித வளங்கள் சேவை விநியோகப் பிரிவின் முகாமையாளர் நிசன்சலா களுபஹான.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC