யூனியன் வங்கி மற்றும் வெஸ்டர்ன் யூனியன் இணைந்து வெளிநாடுகளிலிருந்து பண அனுப்புகைகளுக்கு கவர்ச்சிகரமான அன்பளிப்புகளை வழங்க முன்வந்துள்ளன

வெஸ்டர்ன் யூனியன் ஊடாக வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்தை யூனியன் வங்கிக் கிளைகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான அன்பளிப்பு வழங்கும் திட்டமொன்றை வெஸ்டர்ன் யூனியன் மற்றும் யூனியன் வங்கி ஆகியன இணைந்து அறிமுகம் செய்துள்ளன.

ரூ. 25,000 க்கு அதிகமான பெறுமதியுடைய கொடுக்கல் வாங்கல்கள் இந்த அன்பளிப்புத் திட்டத்துக்கு தகைமை பெறுவதுடன், பிரான்டட் பேனா ஒன்றை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். ரூ. 25,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகைகளில் மூன்று கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது, வாடிக்கையாளர்களுக்கு பிரான்டட் மக் ஒன்றை பெற்றுக் கொள்ளவும், ரூ. 25,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகைகளில் ஐந்து கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது, பிரயாணப்பை ஒன்றை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும். இந்தச் சலுகை மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் தொகை கையிருப்பிலுள்ள வரை மாத்திரம் செல்லுபடியாகும்.

வெளிநாடுகளில் பணியாற்றுவோர் இலங்கைக்கு பணத்தை அனுப்பும் போது, அனுப்பப்படும் தொகையில் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் மேலதிகமாக 2 ரூபாய் வழங்கப்படும் திட்டத்துக்கு மேலதிகமாக இந்த அன்பளிப்புத் திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.

நாடு முழுவதையும் சேர்ந்த 67 யூனியன் வங்கிக் கிளைகளினூடாக வெஸ்டர்ன் யூனியன் பணப் பரிமாற்ற சேவை வழங்கப்படுவதுடன், 200க்கும் அதிகமான வெளிநாடுகளில் பணியாற்றும் மற்றும் வசிக்கும் தமது அன்புக்குரியவர்கள் அனுப்பும் பணத்தை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வசதியை வழங்குகின்றது.

இந்தச் சலுகை தொடர்பில் யூனியன் வங்கியின் பாங்கசூரன்ஸ் மற்றும் பண அனுப்புகை பிரதம முகாமையாளர் கிஹான் சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “வெளிநாட்டு பண அனுப்புகைகள் என்பது மொத்தத் தேசிய உற்பத்தியில் உறுதியான பங்களிப்பை வழங்குவதுடன், இலங்கையின் பல குடும்பங்களின் பிரதான வருமான மூலமாக அமைந்துள்ளது. கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக நாட்டுக்கு வெளி பண அனுப்புகை பாதிக்கப்பட்டுள்ளது. சவால்கள் நிறைந்த சூழலிலும், வெளிநாட்டு பண அனுப்புகையை மேம்படுத்தி தேசிய ரீதியில் பங்களிப்பு வழங்குவதற்காக வெஸ்டர்ன் யூனியன் உடன் கைகோர்த்துள்ளோம். அதனூடாக எமது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளையும் வழங்குகின்றோம். வெஸ்டர்ன் யூனியன் உடன் இணைந்து, வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களின் அன்புக்குரியவர்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் எமது வாடிக்கையாளர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்க முடிந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

வெஸ்டர்ன் யூனியன் பற்றி

நாடுகளுக்கிடையில், பல்வேறு நாணயங்களில் பண அனுப்புகைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை வழங்கும் நிறுவனமாக வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் (NYSE: WU) திகழ்கின்றது. டிஜிட்டல் மற்றும் நிஜ உலகை இணைத்து, நுகர்வோருக்கும் வியாபாரங்களுக்கும் பணக் கொடுப்பனவுகளை வேகமாகவும், இலகுவாகவும் அனுப்பவும், பெறவும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. தனது சர்வதேச சென்றடைவுடன், குடும்பங்களை, நண்பர்களை மற்றும் வியாபாரங்களை இணைக்கும் வகையில் பணத்தை மாற்றும் நடவடிக்கைகளை வெஸ்டர்ன் யூனியன் மேற்கொண்டு, நிதிசார் உள்ளடக்கத்தை செயற்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.westernunion.com எனும் இணையத்தளத்தை பார்க்கவும்.

யூனியன் வங்கி பற்றி

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச தனியார் முதலீட்டு நிறுவனமான TPG இன் முதலீட்டில் இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் வணிக வங்கிகளில் ஒன்றாக யூனியன் வங்கி திகழ்கின்றது. நிதி உறுதித்தன்மை மற்றும் சர்வதேச அறிவுடனான உறுதியான அடித்தளத்தைக் கொண்டு, இலங்கையில் காணப்படும் அதிகளவு மூலதன இருப்பைக் கொண்ட தனியார் வணிக வங்கிகளில் ஒன்றாகவும் யூனியன் வங்கி திகழ்கின்றது. நுகர்வோர், சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகள் மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு முழு அளவிலான நிதித் தீர்வுகளையும் சேவைகளையும் வழங்குகின்றது.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC