யூனியன் வங்கி School of Social Entrepreneurship (UBSSE)இன் தேசிய தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (NEDP) இரண்டாம் கட்டம் அண்மையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த பொது, தனியார் பங்காண்மையாக அமைந்திருப்பதுடன், யூனியன் வங்கி, மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவர் அமைப்பு ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இந்த NEDP திட்டத்தினூடாக, கல்விச் சிறப்பு, நிதிசார் வலுவூட்டல் மற்றும் இலங்கையின் தொழில்முயற்சியாண்மை கட்டமைப்பை வலிமைப்படுத்துவதற்கு அவசியமான புத்தாக்க தலைமைத்துவம் ஆகியன வழங்கப்படுகின்றன. NEDP இரண்டாம் கட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான பங்குபற்றுனர்கள் வரவேற்கப்பட்டுள்ளதுடன், இதில் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட வியாபாரத்தைக் கொண்ட வியாபார உரிமையாளர்கள் மற்றும் புதிய வியாபார சிந்தனைகளைக் கொண்ட எதிர்காலத்தில் வியாபாரமொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளவர்கள் என இருசாராரும் அடங்கியுள்ளனர். அதனூடாக, தொலைநோக்குத் திட்டத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.

