சவால்கள் நிறைந்த சூழலில் நிலையான வளர்ச்சியை எய்துவதற்காக செலவுகளை சீரமைப்பதில் யூனியன் வங்கி கவனம் செலுத்துகின்றது

வங்கி

  • வரிக்கு முந்திய சகல வரிகளும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 54% அதிகரித்து ரூ. 1,422 மில். ஆக பதிவு
  • தேறிய வட்டி வருமானம் ரூ. 3,466 மில். ஆக அதிகரிப்பு
  • தரகு மற்றும் கூலி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12% அதிகரித்து ரூ.784 மில். ஆக பதிவு
  • மொத்த மூலதன போதுமை விகிதம் 16.5% ஆக பதிவு

குழுமம்

  • வரிக்கு பிந்திய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 36% அதிகரித்து ரூ. 606 மில. ஆக பதிவு
  • தேறிய வட்டி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21% அதிகரித்து ரூ. 4,033 மில. ஆக பதிவு
  • மொத்த மூலதன போதுமை விகிதம் 16.3% ஆக பதிவு

2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியியல் துறையில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்திய பாரியளவு பொருளாதார சூழலிலும் முறையான செலவு நிர்வகிப்பு நடவடிக்கைகள் மற்றும் இலாகா இசைவுபடுத்தல் செயற்பாடுகளில் யூனியன் வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்தியிருந்தது.

தொழிற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தியிருந்ததன் பெறுபேறாக, மீளாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் வங்கியின் தொழிற்பாட்டு செலவீனங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5% இனால் மாத்திரம் அதிகரித்து ரூ. 2960 மில்லியனாக பதிவாகியிருந்தது.

தொடர்ந்து நிலவிய பாரிய பொருளாதார தாக்கங்கள், 2019 ஆம் ஆண்டின் 3ஆம் காலாண்டு பகுதியில் வங்கியியல் துறையின் செயற்பாடுகளில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. வட்டிவீதக் கொள்கை மீளாய்வுக்குட்படுத்தப்பட்டிருந்த போதிலும், தனியார் கடனுக்கான கேள்வி தொடர்ந்தும் குறைவாகவே காணப்பட்டது. இது மூன்றாம் காலாண்டில் வங்கியின் ஐந்தொகை வளர்ச்சில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அவ்வாறான சவால்கள் நிறைந்த வியாபார சூழலில், இலாகா மீளமைப்பினூடாகவும், மேம்படுத்தப்பட்ட தரகு மற்றும் கூலி வருமான உருவாக்கம் போன்றவற்றினூடாக வருமான சீராக்கத்தை யூனியன் வங்கி எதிர்பார்த்தது.

வங்கியின் மொத்த தொழிற்படு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19% அதிகரித்து ரூ. 4637 மில்லியனாக பதிவாகியிருந்தது.
செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில், தேறிய வட்டி வருமானம் (NII) ரூ. 3,466 மில்லியனாக பதிவாகியிருந்தது. கூலி வருமான வளர்ச்சியை மேம்படுத்துவது தொடர்பில் வங்கியினால் முன்னெடுக்கப்பட்டிருந்த திட்டமிட்ட செயற்பாடுகளினூடாக, குறித்த காலப்பகுதியில் வங்கியின் தரகு மற்றும் கூலி வருமானம் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 12% அதிகரிப்பை பதிவு செய்து ரூ. 784 மில்லியனாக பதிவாகியிருந்தது. இந்த வளர்ச்சியில் கடன் அட்டைகளின் மீது அறவிடப்பட்ட கையாளல் கட்டணங்களில் பதிவாகியிருந்த அதிகரிப்பு மற்றும் கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்காக வழங்கப்பட்ட வங்கியியல் சேவைகளுக்கான கட்டண வருமானத்தில் அதிகரிப்பு போன்றன இதில் பங்களிப்பு வழங்கியிருந்தன.
வங்கியின் திறைசேரி செயற்பாடுகள் குறித்த காலப்பகுதியில் ரூ. 380 மில்லியனை மூலதன வருமதியாக பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 83% அதிகரிப்பாகும். நாணயமாற்று வீத இழப்பு மற்றும் மீளாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற பெருமளவான நிதியியல் மாற்றங்கள் காரணமாக வங்கியின் இதர வருமானம் வீழ்ச்சியடைந்திருந்தது. மோசமான பாரியளவு பொருளாதார சூழல்கள் காரணமாக வியாபார பெறுமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் மேற்படி குறிகாட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
வங்கியின் வலுக்குறைப்புக்கு முன்பான இலாபம் குறித்த மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 54% அதிகரிப்பை பதிவு செய்து ரூ. 1677 மில்லியனாக பதிவாகியிருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வங்கியின் வலுக்குறைப்பு கட்டணம் ரூ. 354 மில்லியனாக பதிவாகியிருந்தது. 2019 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதிக்கான திரட்டிய வலுக்குறைப்பு கட்டணத் தயாரிப்பின் போது Sri Lanka Accounting Standard – SLFRS 9 (Financial Instruments) இனால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறை பின்பற்றப்பட்டிருந்தது. முன்னைய காலப்பகுதிக்கான கட்டண தயாரிப்பு LKAS 39 (Financial Instruments)விதிமுறையின் பிரகாரம் அமைந்திருந்தது. பாரியளவிலான பொருளாதார சவால்களில் பிரதிபலிப்பை ஏற்படுத்தும் வகையில், வங்கியின் நிகர NPL விகிதம் என்பது ஆக காணப்பட்டதுடன், தேறிய NPL விகிதம் 3.9% ஆக காணப்பட்டது.

தொழிற்படு சூழலில் காணப்பட்ட சவால்களுக்கு மத்தியில், யூனியன் வங்கி சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்ததுடன், ரூ. 1422 மில்லியனை வரிக்கு முந்திய இலாபமாக பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 54% வளர்ச்சியாகும். இதனூடாக, வருடத்தின் மூலோபாய வளர்ச்சி இலக்குகளை எய்துவதை நோக்கி வங்கி பயணிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
துணை நிறுவனங்களிடமிருந்தான இலாப பகிர்வு ரூ. 98 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது ரூ. 51 மில்லியன் அதிகரிப்பாகும். இந்த அதிகரிப்பில் UB ஃபினான்ஸ் லிமிடெட் பாரியளவு பங்களிப்பை வழங்கியிருந்தது.

வருமானம், VAT, NBT மற்றும் நிதிச் சேவைகள் மீதான DRL போன்ற வரிகள் ரூ. 889 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 67% அதிகரிப்பாகும். வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 533 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37% அதிகரிப்பாகும்.

வங்கியின் மொத்த பரிபூரண வருமானம் ரூ. 867 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 469% அதிகரிப்பாகும். கடன் சாதனங்களின் விலை மதிப்பீடு நேர்த்தியான பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தமையினூடாக பெறப்பட்ட பரிபூரண வருமானத்தினால் இந்தப் பெறுமதிக்கு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது.

செப்டெம்பர் 30ஆம் திகதியன்று, வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 115,574 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் கடன்கள் மற்றும் கிடைக்கப்பெறவேண்டியவைகள் ரூ. 74,998 மில்லியனாக பதிவாகியிருந்தது. வைப்புகளின் இருப்பு என்பது ரூ. 74,707 மில்லியனாக பதிவாகியிருந்தது. மொத்த சராசரி CASA பெறுமதி ரூ. 18,923 மில்லியனாக வளர்ச்சியடைந்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22% அதிகரிப்பாகும். ஆரோக்கியமான CASA பாய்ச்சல்களை எய்துவதற்கான முயற்சிகளில், நுகர்வோர், கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் வங்கியில் பிரிவுகளின் கவனம் செலுத்தப்பட்ட கையகப்படுத்தல் மூலோபாயங்கள் பங்களிப்பு வழங்கியிருந்தன.

உறுதியான மூலதன விகிதங்களை பேணுவதில் நிர்வாகம் முக்கியத்துவமளித்திருந்தது. யூனியன் வங்கியின் மொத்த மூலதன போதுமை விகிதம் 2019 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று 16.5% ஆக பதிவாகியிருந்தது. இது ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை உயர்ந்தமட்டத்தில் அமைந்திருந்தது.

வங்கி மற்றும் இரு துணை நிறுவனங்களான நஷனல் அஸெட் மனேஜ்மன்ட் லிமிடெட் மற்றும் UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் ஆகியவற்றைக் கொண்ட குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 606 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 36% வளர்ச்சியாகும். குழுமத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 124,061 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் 93%ஐ வங்கியின் வசம் காணப்பட்டது. குழுமம் ஐந்தொகை திகதியன்று தன்வசம் ஆரோக்கியமான மூலதன விகிதமான 16.3% ஐ கொண்டிருந்தது.

 

தொழிற்படு வினைத்திறன்

3ஆம் காலாண்டு பகுதியில் காணப்பட்ட சவால்கள் நிறைந்த சந்தை சூழலிலும், யூனியன் வங்கி சிறந்த வியாபார வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.
போட்டிகரமான சந்தைச் சூழலில் வங்கியின் கூட்டாண்மை வங்கியியல் அலகு தொடர்ந்தும் முன்னேற்றத்தை பதிவு செய்திருந்தது. குறிப்பாக, மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் தனது பிரதான இலக்குகளான வருமானம் மற்றும் சொத்துக்கள் வளர்ச்சி ஆகியவற்றை எய்தியிருந்தது.

நாட்டில் நிலவும் பொருளாதார சூழலால் சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் (SMEs) பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. சந்தையில் காணப்படும் சிறியளவிலான நிறுவனங்களின் பின்பற்றல் நிலையை தொடர்ந்தும் பரிசோதிப்பதாக இந்த சூழல் காணப்படுகின்றது. சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு மத்தியில், யூனியன் வங்கியினால் தொடர்ந்தும் மூலோபாய முக்கியத்துவங்கள் இனங்காணப்பட்டு அவற்றின் வளர்ச்சிக்கும், நிலைத்திருப்புக்குமான தொடர்ச்சியாக தீர்வுகள் மற்றும் ஆலோசனை சேவைகள் போன்றன வழங்கப்படுகின்றன.
வங்கியின் முன்னணி கொடுக்கல் வாங்கல் தீர்வான, யூனியன் வங்கி Biz Direct தொடர்ந்தும், கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு பெறுமதி சேர்த்திருந்தது. இந்த வங்கியியல் கொடுக்கல் வாங்கல் தீர்வில் தற்போது மாற்றங்களை ஏற்படுத்திய வண்ணமுள்ளதுடன், இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு மேலும் சௌகரியத்தை பெற்றுக் கொடுக்கும் வகையிலான உள்ளம்சங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

நுகர்வோர் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பிரிவு மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ஓரளவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. வங்கியின் கடன் அட்டை பிரிவு, மேலும் விஸ்தரிக்கப்பட்டிருந்ததுடன், விடுமுறை, உணவகம், சொப்பிங் போன்ற கவர்ச்சிகரமான வாழ்க்கைமுறை சலுகைகளை வழங்கும் திட்டங்களையும் முன்னெடுத்திருந்தது.

யூனியன் வங்கியின் நடைமுறை மற்றும் சேமிப்பு (CASA) மீதிகளை கட்டியெழுப்பும் நோக்கில், சிறுவர் சேமிப்பு, முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் நிறுவனசார் CASA போன்றவற்றில் தொடர்ச்சியான இலாகா கட்டியெழுப்பலை மேற்கொண்டிருந்தது. இந்த செயற்பாடுகளை கிளைகள், உறவு முகாமையாளர்கள் மற்றும் அர்ப்பணிப்பான விற்பனை செயலணிகள் போன்றவற்றினூடாக முன்னெடுத்து, புதிய கையகப்படுத்தல்களை மேற்கொண்டிருந்தது. இதன் பெறுபேறாக, வங்கியின் CASA இருப்பு 2019 செப்டெம்பர் மாதத்தில் நடப்பு ஆண்டில் 26.4% இனால் அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.
செயன்முறைகளை சீரமைப்பதனூடாக தொழிற்பாட்டு வினைத்திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட உற்பத்தித் திறன் போன்றவற்றில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தியிருந்ததன் காரணமாக, மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் செலவு முகாமைத்துவத்தை மேம்படுத்திக் கொள்ள முடிந்தது.

வங்கி தனது ஒன்லைன் மற்றும் மொபைல் வங்கியியல் சேவைகளினூடாக மேம்படுத்தப்பட்ட வங்கியியல் சௌகரியங்களை வழங்கியிருந்ததுடன், கடன் அட்டைகளுக்காக இந்த கட்டமைப்புகளினூடாக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கான வசதிகளுடன், சுய சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளை ஏற்படுத்தும் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளது.

2019 ஆகஸ்ட் மாதத்தில், யூனியன் வங்கியின் கூட்டாண்மை இணையத்தளமான www.unionb.com க்கு அமெரிக்காவை தளமாகக் கொண்டு வழங்கப்படும் dotCoMM விருதுகள் 2019 இல் நிதியியல் பிரிவில் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. வங்கியின் வெற்றிகரமான செயற்பாடுகளை இது மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளதுடன், அதன் நவீன டிஜிட்டல் உள்ளம்சங்களைக் கொண்ட செயற்பாடுகளின் பாதுகாப்பையும், பிரசன்னத்தையும் மேம்படுத்தி, பாவனையாளர்களுக்கு சௌகரியத்தை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
மூன்றாம் காலாண்டு நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ”சவால்கள் நிறைந்த பொருளாதார பின்புலத்திலும், உயர் வரி அறவீடுகள் காணப்படும் ஒரு காலகட்டத்தில் யூனியன் வங்கியின் முதல் ஒன்பது மாத காலப்பகுதிக்கான சிறந்த நிதிப் பெறுபேறுகளை பகிர்ந்து கொள்வதையிட்டு நான் மிகவும் பெருமை கொள்கின்றேன். கடுமையான சூழல்களில் வங்கி மூலோபாய அடிப்படையில் பயணிப்பதை தெளிவாக உறுதி செய்துள்ளது. செயற்பாட்டு வினைத்திறன், டிஜிட்டல் வங்கியியல் தரவுகள் மற்றும் உள்ளடக்கமான இலாகா விரிவாக்கங்கள் போன்றன ஆண்டின் நான்காம் காலாண்டிலும் சிறந்த பங்களிப்பை வழங்கும் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இக்காலப்பகுதியில் எமது 2019 ஆம் ஆண்டின் இலக்குகளை வெற்றிகரமாக எய்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.” என்றார்.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC