அரசாங்க ஓய்வூதியம் பெறுவோருக்கான போட்டிகரமான கடன் திட்டத்தை யூனியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது

அரச ஓய்வூதியம் பெறுவோருக்கு தமது ஓய்வூதிய வாழ்வை கண்ணியத்துடனும், வலிமையுடனும் வாழ்வதற்கு வலுவூட்டும் வகையில் யூனியன் வங்கியினால் புதிய யூனியன் வங்கி பென்ஷன் கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. “ஓய்வூதிய வாழ்க்கையை பாரமாக்கிக் கொள்ளாமல் பலமாக்கிக் கொள்ளுங்கள்!” எனும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கடன் திட்டம், அரச ஓய்வூதியம் பெறுவோருக்கு வெகுமதிகளை வழங்கும் நிதித் தீர்வாக அமைந்துள்ளது.

விதவை ஓய்வூதியம் பெறுபவர்கள், மத்திய வங்கி ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் சேவையில் இல்லாத முப்படைகளின் உறுப்பினர்கள் ஆகியோரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஓய்வூதியம் பெறுவோருக்கு உண்மையான நிதிச் சுதந்திரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டுவதற்கு, நீண்டகால வாழ்நாள் கனவொன்றை நிறைவேற்றுவதற்கு, தனிப்பட்ட செலவுகளை ஈடுசெய்வதற்கு அல்லது வருமானம் ஈட்டக்கூடிய ஒரு சுயதொழில் வழியை உருவாக்குவதற்கு அரச ஓய்வூதியாளர்கள் 8 மில்லியன் ரூபாய் வரை இக்கடனைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், 15 ஆண்டுகள் வரையிலான மிகவும் இலகுவான கடனை மீளச்செலுத்தும் காலப்பகுதியும் வழங்கப்படுகின்றது. இக்கடன் செயல்முறையை எவ்வித மனஅழுத்தமும் இன்றி மிகவும் இலகுவானதாக மாற்றுவதற்காக, வங்கி குறைந்த வட்டி வீதங்கள் மற்றும் அதிவேகக் கடன் அனுமதிகளை வழங்குவதுடன், இதற்குத் தனிப்பட்ட பிணையாளர்கள் எவரும் தேவையற்றதாகும்.

யூனியன் வங்கி நுகர்வோர் தீர்வுகள் மற்றும் அட்டைகள் உப தலைவர் மலிந்த பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் வங்கி, தனது வாடிக்கையாளர்களை அரவணைப்பதற்காக வழங்கும் முற்றிலும் இலவசமான தினசரி வாழ்க்கைமுறைச் சலுகைகள் இந்த ஓய்வூதியக் கடனை உண்மையில் தனித்துவம் வாய்ந்ததாக மாற்றுகின்றன. அந்தவகையில், யூனியன் வங்கி, சந்தையிலுள்ள ஆகக்கூடிய கடன் தொகையான 8 மில்லியன் ரூபாயை வழங்குவதுடன், வேறு எந்தவொரு வங்கியும் வழங்காத சில விசேட சலுகைகளை வழங்கும் ஒரேயொரு வங்கியாகவும் திகழ்கின்றது. ஓய்வூதியதாரர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் பயணம் செய்வதற்காக வருடந்தோறும் 30,000 ரூபாய் பெறுமதியான இலவச PickMe பயணச் சலுகைகளைப் பெற்றுக்கொள்வர். அத்துடன், நவலோக்க வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும், தங்களது பிறந்த மாதத்தில் கொள்வனவு செய்யும் மருந்துகளுக்கான பணமீளப் பெறுகை சலுகையையும் உள்ளடக்கிய 7,000 ரூபாய் பெறுமதியான வருடாந்த சுகாதாரக் காப்புத் திட்டத்தையும் ஏனைய சலுகைகளுடன் சேர்த்து அவர்கள் பெற்றுக்கொள்வர். மேலும், திடீரென ஏற்படும் அவசர நிதித் தேவைகளின் போது ஒரு கூடுதல் பாதுகாப்பு அரணாக விளங்கும் வகையில், ஓய்வூதியதாரர்களுக்கு முன்கூட்டியே அனுமதியளிக்கப்பட்ட யூனியன் வங்கி கிரெடிட் கார்ட் ஒன்றும் வழங்கப்படும்.” என்றார்.

யூனியன் வங்கி பென்ஷன் கடன் பற்றிய மேலதிக தகவல்களை www.unionb.com இல் பார்வையிடலாம் அல்லது ஓய்வூதியம் பெறுவோர் 0117818181 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களையும், உதவிகளையும் பெறலாம்.

படம் – மலிந்த பெரேரா, நுகர்வோர் தீர்வுகள் மற்றும் அட்டைகள் உப தலைவர்.

Leave a comment

For security, use of Google's reCAPTCHA service is required which is subject to the Google Privacy Policy and Terms of Use.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC