நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிட்டெட் (NAMAL) தலைவர், அலெக்சிஸ் லொவெல், நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக ருசிரு அபேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். 2018 ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் 1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முன்னணி அலகு நம்பிக்கை முகாமைத்துவ நிறுவனமாக நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிட்டெட் (NAMAL) திகழ்கிறது. பங்கு மற்றும் நிலையான வருமான சந்தைகளில் முதலீடுகளை மேற்கொள்வதில் 27 வருட கால அனுபவத்தை இவர் கொண்டுள்ளார். யூனியன் வங்கியின் துணை நிறுவனமாக NAMAL திகழ்வதுடன், ஏனைய பங்குதாரர்களாக DFCC வங்கி மற்றும் என்னிட் கெப்பிட்டல் பிரைவட் லிமிட்டெட் திகழ்கிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கள் பிரிவில் அனுபவத்தை கொண்டுள்ள அபேசிங்க, பல சாதனைகளை நிறைவேற்றியுள்ளார். 11 வருட காலம் துறையில் பணியாற்றிய அனுபவத்தை கொண்டுள்ள அபேசிங்க, முன்னர் DPMC அசெட்லைன் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிட்டெட்டில் (DPAH) பிரதான செயற்பாட்டு அதிகாரியாக பணியாற்றியுள்ளார். டேவிட் பீரிஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக DPMC அசெட்லைன் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிட்டெட் திகழ்வதுடன், DP ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிட்டெட்டின் முழு உரிமையாண்மையை பெற்ற துணை நிறுவனமாகும். பீனிக்ஸ் வென்ச்சர்ஸ் பிரைவலட் லிமிட்டெட்டில் முதலீடுகளுக்கான தலைமை அதிகாரியாகவும் அபேசிங்க பணியாற்றியுள்ளார். பிரான்டிக்ஸ் லங்கா லிமிட்டெட்டின் தாய் நிறுவனமாக இது திகழ்கிறது. பரந்தளவு சொத்துக்கள் முகாமைத்துவ செயற்பாடுகளை அபேசிங்க முன்னெடுத்துள்ளதுடன், இதில் பட்டியலிடப்பட்ட பங்குகள், நிலையான வருமானம், தனியார் பங்காண்மை மற்றும் ரியல் எஸ்டேட் போன்றன அடங்கியுள்ளன. சினமன் எயார் சேவையை முன்னெடுக்கும் சஃவ்ரொன் ஏவியேஷன் பிரைவட் லிமிட்டெட்டின் பிரேரிக்கப்பட்ட பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கார்டிஃவ் மெட்ரொபொலிடன் பல்கலைக்கழகத்தில் ஆடீயு பட்டத்தை அபேசிங்க பெற்றுள்ளதுடன், பிரித்தானியாவின் முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய கல்வியகத்தின் துணை அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

