யூனியன் வங்கி 2026 முதல் ஒன்பது மாதங்களில் ரூ. 1.7 பில். வரிக்கு முந்திய இலாபமாகப் பதிவு

2026 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் யூனியன் வங்கி தனது வளர்ச்சிப் போக்கை மேலும் தொடர்ந்து, இலாபகரத்தன்மை, பிரதான வருமானம் மற்றும் ஐந்தொகை வளர்ச்சி போன்றவற்றை பதிவு செய்துள்ளது.

வரிக்கு முந்தைய இலாபம் 48% இனால் உயர்ந்து ரூ. 1,744 மில்லியனாகவும், வரிக்குப் பிந்திய இலாபம் இரண்டு மடங்கிற்கு அதிகமாக உயர்ந்து ரூ. 701 மில்லியனாக பதிவாகி, 104% உயர்வை வெளிப்படுத்தியிருந்தது.

தேறிய வருமானம் 20% இனால் உயர்ந்து ரூ. 15,803 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய வட்டி வருமானம் (NII) 27% இனால் உயர்ந்து ரூ. 5,039 மில்லியனாக பதிவாகியிருந்தது. பிரதான வங்கியியல் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தியிருந்தமை மற்றும் கடன் வழங்கலில் வளர்ச்சி போன்றன இதில் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தன. மொத்த தொழிற்படு வருமானம் 9% இனால் உயர்ந்து ரூ. 6,438 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், தொழிற்படு செலவுகள் 8% இனால் உயர்ந்து ரூ. 4,974 மில்லியனாக பதிவாகியிருந்தது. தொழிற்படு செயற்பாடுகளினூடான பெறுபேறுகள் 49% இனால் உயர்ந்து ரூ. 1,651 மில்லியனாக பதிவாகியிருந்தது.

வங்கியின் மொத்த சொத்துகள் 20% இனால் உயர்ந்து ரூ. 207,087 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய கடன்கள் மற்றும் முற்பணங்கள் 25% இனால் உயர்ந்து ரூ. 138,329 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. வாடிக்கையாளர்களின் வைப்புகள் 16% இனால் உயர்ந்து ரூ. 138,096 மில்லியனாக பதிவாகியது. தேறிய கடன்கள் மற்றும் முற்பணங்கள் ரூ. 145,433 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், தேறிய நிலை 3 கடன் விகிதம் 8.0% ஆக முன்னேறி, வங்கியின் சிறந்த கடன் தரத்தை பிரதிபலித்திருந்தது.

குழும மட்டத்தில், மொத்த சொத்துக்களின் பெறுமதி 22% இனால் உயர்ந்து ரூ. 224,591 மில்லியனாக பதிவாகியிருந்தது. குழுமத்தின் வரிக்கு முந்திய இலாபம் 51% இனால் உயர்ந்து ரூ. 2,061 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், வரிக்கு பிந்திய இலாபம் 108% இனால் உயர்ந்து ரூ. 723 மில்லியனாக பதிவாகியிருந்தது. குழுமத்தின் பெறுபேறுகளில் UB ஃபினான்ஸ் பிஎல்சி மற்றும் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியவற்றின் தரவுகளும் அடங்கியுள்ளன.

இந்த நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் வங்கியின் தவிசாளர் தினேஷ் வீரக்கொடி கருத்துத் தெரிவிக்கையில், “2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பதிவாகியுள்ள நிதிப் பெறுபேறுகளினூடாக, சவால்கள் நிறைந்த சூழலிலும், வங்கியினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள உறுதியான முன்னேற்றம் மற்றும் பிரதான வங்கியியல் செயற்பாடுகளின் சீரான செயற்பாடுகள் போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளன. நிலைபேறான வளர்ச்சி, உறுதியான இடர் முகாமைத்துவம் மற்றும் சகல பங்காளர்களுக்கும் நீண்ட கால பெறுமதி உருவாக்கம் போன்றவற்றில் நாம் உறுதியாக கவனம் செலுத்துகின்றோம்.” என்றார்.

வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், “இலாபகரத்தன்மை, நிதி வழங்கல்கள் மற்றும் வைப்புகள் போன்றவற்றில் உறுதியான வளர்ச்சியினூடாக, வாடிக்கையாளர் பிரிவுகளில் ஒழுக்கமான செயற்பாடுகளின் தாக்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போக்கை தொடர்ந்தும் கட்டியெழுப்புவதற்காக, தீர்வுகள், விநியோகம், டிஜிட்டல் ஆற்றல்கள் மற்றும் சேவைச் சிறப்பு போன்றவற்றில் நாம் தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொள்வோம்.” என்றார்.

படங்கள்;
தினேஷ் வீரக்கொடி, தவிசாளர், யூனியன் வங்கி
தில்ஷான் ரொட்ரிகோ, பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி, யூனியன் வங்கி

Leave a comment

For security, use of Google's reCAPTCHA service is required which is subject to the Google Privacy Policy and Terms of Use.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC