யூனியன் வங்கி Payment Card Industry Data Security Standard (PCI DSS) version 4 சான்றிதழைப் பெற்ற முதலாவது வங்கி எனும் முக்கியமான மைல்கல்லை பூர்த்தி செய்துள்ளது. இந்த நிலை கௌரவிப்பைப் பெற்றுக் கொண்ட முதலாவது உள்நாட்டு வங்கி எனும் நிலையை எய்தியுள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் PCI DSS சான்றிதழினூடாக தொடர்ச்சியாக எய்தியிருந்த சாதனைகளின் வெளிப்பாடாக, வாடிக்கையாளர் தகவல் பாதுகாப்பில் உயர் நியமங்களை பேணியிருந்தமைக்காக வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த சான்றிதழ் மேலும் உறுதி செய்துள்ளது.
யூனியன் வங்கியின் பிரதம தகவல் அதிகாரி நிசல கொடிப்பிலி கருத்துத் தெரிவிக்கையில், “PCI DSS version 4 சான்றிதழ் என்பதனூடாக, பாதுகாப்பான கொடுப்பனவு கையாளலில் பிந்திய மற்றும் மேம்படுத்தப்பட்ட நியமங்கள் பிரதிபலிக்கப்படுகின்றன. அதனூடாக பிந்திய பாதுகாப்பு ஏற்பாடுகளினூடாக வாடிக்கையாளர் தரவுகள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படுகின்றது. வாடிக்கையாளர் தகவலை பாதுகாப்பதற்கான யூனியன் வங்கியின் அர்ப்பணிப்பு மற்றும் அதன் நிதிச் சேவைகள் மீதான நம்பிக்கையை பேணுவதற்கான எடுத்துக்காட்டாக இந்த சான்றிதழ் அமைந்துள்ளது. இந்த சாதனையை வங்கி கொண்டாடும் நிலையில், சான்றளிப்பு செயன்முறையில் பங்களிப்பு வழங்கியிருந்த அனைவரின் முயற்சிகளை கௌரவிக்க வேண்டியதும் முக்கியமானதாகும். குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அணிகளின் கண்ணியமான மற்றும் நிபுணத்துவமான செயற்பாடுகள் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தன. பாதுகாப்பு மற்றும் பின்பற்றல் செயற்பாடுகளில் வங்கியின் முன்னாயத்தமான செயற்பாடுகள் தொழிற்துறையில் நியமத்தை தோற்றுவித்துள்ளதுடன், நவீன பாதுகாப்பு செயன்முறைகளை பின்பற்றுவதில் தலைமைத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.” என்றார்.
பாதுகாப்பு மற்றும் பின்பற்றல் செயற்பாடுகளில் யூனியன் வங்கி காண்பிக்கும் அர்ப்பணிப்பினூடாக, வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்கள் மத்தியில் நம்பிக்கை தூண்டுவதாக அமைந்திருப்பதுடன், தரவு பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பு போன்றவற்றில் உயர் நியமங்களை பேணுவதற்கு உதவியாகவும் அமையும்.
படம்: நிசல கொடிப்பிலி, யூனியன் வங்கியின் பிரதம தகவல் அதிகாரி

