ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பில் முன்னேற்றங்களை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக, பணவீக்க வளர்ச்சி படிப்படியாக குறைவடைந்ததையும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான அறிவித்தல் வெளியாகியிருந்தமை போன்றன இதில் தாக்கம் செலுத்தியிருந்தன.
நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில், யூனியன் வங்கி அதன் பிரதான வங்கி வினைத்திறனில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை பதிவு செய்திருந்ததுடன், ஒட்டுமொத்த வருமானமாக ரூ. 11,729 மில்லியனை பதிவு செய்திருந்தது. ஒப்பீட்டளவில் இந்தப் பெறுமதி 58% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் வருமானத்தில் அதிகரிப்பு பதிவாகியிருந்தமையில், தேறிய வட்டி வருமானம் (NII) அதிகரித்திருந்தமை பங்களிப்புச் செய்திருந்தது. இப்பெறுமதி 24% இனால் அதிகரித்து ரூ. 3,118 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில், கடன் பிரிவு மற்றும் திறைசேரி சொத்துக்களிலிருந்து கிடைத்திருந்த மேம்பட்ட வருமதிகள் பங்களிப்புச் செலுத்தியிருந்தன. திறைசேரியில் GSEC மூலதன வருமதிகள் மற்றும் அந்நியச் செலாவணி இலாபகரத்தன்மை ஆகியவற்றிடமிருந்து பெருமளவு பங்களிப்புகள் கிடைத்திருந்தன. வங்கி எவ்விதமான சர்வதேச இறையாண்மை முறிகளை (ISBs) கொண்டிருக்கவில்லை என்பதுடன், வங்கியிடம் காணப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகள் (SLDB’s) முதிர்வடைந்திருந்ததுடன், வருமதிக்காக காத்திருக்கின்றன. தேறிய வட்டி எல்லைப் பெறுமதி (NIM) 82 புள்ளிகளால் அதிகரித்திருந்தது, உரிய காலப்பகுதியில் சொத்துக்கள் மீள்விலையிடல் மற்றும் வட்டிசார் செலவுகள் முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்தமை இதில் பங்களிப்புச் செய்திருந்தன.
தேசிய கட்டணம் மற்றும் தரகு வருமானம் 18% இனால் அதிகரித்திருந்தது. இதில் கடன் அட்டைகள், வெளிநாட்டு பண அனுப்புகைகள் மற்றும் வர்த்தக வியாபாரங்களின் அதிகரித்த செயற்பாடுகள் போன்றன பெருமளவில் பங்களிப்புச் செய்திருந்தன. ஒதுக்கங்களுக்கு முன்னரான வங்கியின் மொத்த தொழிற்பாட்டு வருமானம் ரூ. 4,029 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது 13% அதிகரிப்பாகும். ஒப்பீட்டு காலப்பகுதியில், வங்கியின் மதிப்பிறக்க கட்டணம் ரூ. 726 மில்லியனாக குறைந்திருந்தது. கடுமையான மீட்பு அறவீட்டு ஏற்பாடுகளினால் இந்தப் பெறுமதி பதிவாகியிருந்தது. கடுமையான செலவு நிர்வாக ஏற்பாடுகள் காணப்பட்ட போதிலும், வங்கியின் மொத்த செயற்பாட்டு செலவுகள் 21% இனால் அதிகரித்து ரூ. 2,496 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில், சம்பள அதிகரிப்புகள், மின்சாரம் சார்ந்த அதிகரிப்புகள் மற்றும் அந்நிய செலாவணி நட்டம் போன்றன பங்களிப்பு செய்திருந்தன.
மேலும், 2023, ஜுன் 30 ஆம் திகதியன்று, துணை நிறுவனங்கள் அடங்கலாக வங்கியின் வரிக்கு முந்திய இலாபம் (PBT) 76% இனால் அதிகரித்து ரூ. 533 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் வரிக்கு பிந்திய இலாபமும் (PAT) குறிப்பிடத்தக்க வகையில் 94% இனால் அதிகரித்து ரூ. 295 மில்லியனாக பதிவாகியிருந்தது.
2023 ஜுன் 30 ஆம் திகதியன்று, வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 128,904 மில்லியனாக பதிவாகியிருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வங்கி உறுதியான திரள்வு நிலையை பேணியிருந்தது. வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் ரூ. 62,446 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், வாடிக்கையாளர்கள் வைப்புகள் ரூ. 88,907 மில்லியனாக பதிவாகியிருந்தது. CASA விகிதம் 2023 ஜுன் 30 ஆம் திகதியன்று 25.19% ஆக உயர்ந்திருந்தது. இதில் பெரும்-பொருளாதார ஏற்பாடுகளுடன், சகல வியாபார பிரிவுகளிலும் உறுதியான கொள்முதல் செயற்பாடுகள் போன்றன பங்களிப்புச் செய்திருந்தன. வங்கியின் நிலை 3 கடன் விகிதம் 10.5% ஆக காணப்பட்டது.
வங்கி தொடர்ந்தும் ஆரோக்கியமான மூலதன போதுமை விகித நிலையை பேணியிருந்தது. ஒழுங்குபடுத்தல் தேவைப்பாட்டை விட உயர்வாக காணப்பட்ட வங்கியின் மொத்த மூலதன விகிதிம் 2023 ஜுன் 30 ஆம் திகதியன்று 19.01% ஆக காணப்பட்டது.
UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியவற்றைக் கொண்ட யூனியன் வங்கிக் குழுமம், சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது. 2023 ஜுன் 30 ஆம் திகதியன்று, குழுமத்தின் வரிக்கு முந்திய இலாபம் 56% இனால் அதிகரித்து ரூ. 618 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், வரிக்கு பிந்திய இலாபம் 77% இனால் அதிகரித்து ரூ. 364 மில்லியனாகவும் பதிவாகியிருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துக்கள் பெறுமதி ரூ. 136,991 மில்லியனாக பதிவாகியிருந்தது.
மீளாய்வுகுட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், வியாபார விரிவாக்கத்தை கவனத்தில் கொண்டு பல்வேறு வாடிக்கையாளர் கையகப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களை வங்கி முன்னெடுத்திருந்தது. வங்கியின் மீள்நிதியளிப்புத் திட்டங்களினூடாக, சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வங்கிப் பிரிவுக்கு, பெண் தொழில் முயற்சியாளர்கள் அடங்கலாக, பரந்தளவு வாடிக்கையாளர் பிரிவை சென்றடைய முடிந்தது. யூனியன் வங்கி கடன் அட்டைகள் பிரிவினாலும், பல்வேறு சேமிப்பு மற்றும் இதர சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. இதற்காக பரந்தளவு விற்பனை நிலையங்களுடன் கைகோர்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதில் சுப்பர்மார்க்கெட்கள், உணவகங்கள் மற்றும் சொப்பிங் நிலையங்கள் அடங்கியிருந்தன. 0% வட்டியில்லாத, நீடிக்கப்பட்ட மீளச் செலுத்தல் திட்டங்கள் கையாளல் கட்டணங்கள் எதுவுமின்றி, சுகாதாரத்துறை, கல்வி, வாகன பராமரிப்பு, விருந்தோம்பல் மற்றும் பிரயாணத் துறைகளில் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. யூனியன் வங்கி வர்த்தக நாமம் அதன் உயர்ந்த ஸ்தானத்தை தொடர்ந்தும் பேணியிருந்தது. 2023 பிரான்ட் ஃபினான்ஸ் தரப்படுத்தலின் பிரகாரம் இலங்கையின் 100 சிறந்தர வர்த்தக நாமங்களில் யூனியன் வங்கியும் இடம்பிடித்திருந்தது. பெண் முகாமையாளர்களை கட்டியெழுப்பியிருந்தமைக்காக Satyn CIMA பெண்களுக்கு நட்பான பணியிட விருதுகள் 2023 இல் வங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
படங்கள்:
அத்துல் மலிக், தவிசாளர், யூனியன் வங்கி
இந்திரஜித் விக்ரமசிங்க, பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி, யூனியன் வங்கி

