வெசாக் பண்டிகையை முன்னிட்டு யூனியன் வங்கி தமது ஊழியர்களுக்காக ஒளி விளக்குக்கூடு அலங்கார போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு மே மாதம் 4ஆம் திகதி இடம்பெற்றது. வங்கியின் சகல பிரிவுகளையும் சேர்ந்த ஊழியர்கள் தமது ஆக்கபூர்வமான ஒளி விளக்குக்கூடு அங்காரங்களை அனுப்பியிருந்தனர். இந்த அலங்காரங்கள் மீள்சுழற்சிக்குட்படுத்திய பொருட்களிலிருந்து தயாரிக்கப்படல் எனும் தொனிப்பொருளுக்கமைய வடிவமைக்கப்பட்டிருந்தன.
இந்த வெசாக் பண்டிகைக் கொண்டாட்டங்களில், சூழலுக்கு நட்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஒளி விளக்குக்கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்த விளக்குக்கூடுகள் சூழலுக்கு நட்பான அல்லது மீள்சுழற்சிக்குட்படுத்திய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தன. இந்த முன்னெடுப்புக்கு சகல கிளைகள் மற்றும் பிரிவுகளிலிருந்து சிறந்த பங்கேற்பு பதிவாகியிருந்தது. அணி அங்கத்தவர்களிடையே சிறந்த ஒற்றுமை மற்றும் ஈடுபாட்டை ஊக்குவிப்பதாக இந்த நடவடிக்கை அமைந்திருந்ததுடன், சூழலை பாதுகாப்பது தொடர்பில் வங்கியினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அமைந்திருந்தது.
இந்த ஒளி விளக்கக்கூடுகளை தயாரிப்பதற்கு பல்வேறு மீள்சுழற்சிக்குட்படுத்தப்பட்ட பொருட்களை அணியினர் பயன்படுத்தியிருந்தனர். பிரத்தியேகமான வடிவமைக்கப்பட்ட அலங்காரங்களிலிருந்து, வரகாபொல கிளையைச் சேர்ந்த அணியினர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர். உள்ளக கணக்குமீளாய்வு பிரிவு மற்றும் கண்டி கிளையைச் சேர்ந்த அணியினர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
படம்: பல்வேறு கிளைகள் மற்றும் பிரிவுகளிலிருந்து அனுப்பப்பட்ட ஒளி விளக்குக்கூட்டு அலங்காரங்களிலிருந்து வெற்றியீட்டிய அங்காரங்களைக் காணலாம்.

