JustPay உடன் யூனியன் வங்கி மொபைல் App தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது

யூனியன் வங்கி தனது மொபைல் app ஆன UBgo, தற்போது LankaPay இன் JustPay கொடுப்பனவு தீர்வினூடாக மேலும் வரையறைகளற்ற கொடுப்பனவுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

JustPay ஒன்றிணைப்பினூடாக, UBgo பாவனையாளர்களுக்கு வேறெந்தவொரு வங்கியிலிருந்தும் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் சௌகரியம் வழங்கப்படும் என்பதுடன், தமது யூனியன் வங்கி சேமிப்பு அல்லது நடைமுறைக் கணக்குகளை உடனடியாக ‘Top up’ செய்து கொள்ளும் வசதியையும் வழங்கும். JustPay உடனான ஒன்றிணைப்பினூடாக, UBgo app பாவனையாளர்களுக்கு கொடுப்பனவுகள், பண மாற்றங்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது போன்ற அனைத்தையும் ஒரு app இல் மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக, பல்வேறு வங்கிகளின் app களினூடாக மாற்றிக் கொள்ளாமல், ஏனைய வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை இலகுவாகப் பெற்று தமது வாழ்க்கைத்தர கொடுப்பனவுகளை இலகுவாக நிர்வகித்துக் கொள்ள முடியும். இது UBgo app பாவனையாளர்களுக்கு தமது கொடுப்பனவுகள் மற்றும் செலவுகளை முறையாக கண்டறிவதற்கு உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், UBgo app ஊடாக யூனியன் வங்கி கணக்கினூடாக சகல கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்படும். UBgo இல் JustPay ஒன்றிணைவு என்பது அவசர தேவைகளின் போது பாவனையாளர்களுக்கு அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும் என்பதுடன், அவசர கொடுப்பனவு தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு ஒன்றுக்கு, கிளைக்கு விஜயம் செய்யாமல் மற்றும் appகளிடையே மாறி மாறி கொடுப்பனவுகளை மேற்கொள்ளாமல், ஏனைய வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.

இந்த app இன் பிந்திய மெருகேற்றம் தொடர்பில் யூனியன் வங்கியின் நுகர்வோர் பொறுப்புக்கூறல் தயாரிப்பு மற்றும் மாற்று நாளிகைகள் உதவி பிரதித் தலைவர் மனிஷா பெர்னான்டோ தெரிவிக்கையில், “தேசிய கொடுப்பனவு சேவைகள் வழங்குநரான LankaClear (Pvt) Ltd உடன் நாம் தொடர்ந்து கைகோர்த்து செயலாற்றுவதுடன், அதனூடாக UBgo இல் பாவனையாளர் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளோம். JustPay வசதியின் ஒன்றிணைப்பினூடாக, UBgo பாவனையாளர்களுக்கு வேறெந்தவொரு வங்கியிலிருந்தும் தமது கணக்குகளை இலகுவாக top up செய்து கொள்ள முடியும். இவ்வாறு மேற்கொள்வதனூடாக, அவர்களுக்கு தமது சகல வங்கிக் கணக்குகளையும் ஒரே app இல் கொண்டிருக்க முடியும். UBgo app ஐப் பயன்படுத்தி மற்றும் Lanka QR வசதியினூடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ள உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், தமது யூனியன் வங்கி கணக்குகளில் போதியளவு மீதி காணப்படுவதை உறுதி செய்வதனூடாக உடனுக்குடனான நிதி மாற்றங்கள் அல்லது ஒன்லைன் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு வசதியளிப்பதாக அமைந்திருக்கும். இந்த பிரதான டிஜிட்டல் வங்கியியல் நாளிகையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு முக்கிய படிமுறையாக இது அமைந்திருப்பதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு இந்த சமூகத் தனிமைப்படுத்தல் அவசியமான காலப்பகுதியில் சஞ்சரிப்புகளை குறைத்து, சௌகரியமாக தொடுகைகளற்ற வங்கியியல் அனுபவத்தை பெற்றுக் கொள்வதற்கு உதவும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் UBgo மேலும் மேம்படுத்தப்படும் என்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில், ஒப்பற்ற கொடுப்பனவு மற்றும் கொடுக்கல் வாங்கல் சௌகரியங்களை தமது வங்கிக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி வழங்கப்படும். என்றார்.

UBgo இல் JustPay வசதியைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு, பாவனையாளர்கள் app இனுள் login செய்து, பணத்தைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் தமது இதர வங்கி கணக்கு இலக்கத்தைப் பதிவு செய்து, தேவையான பெறுமதியை பதிவு செய்து தெரிவு செய்த யூனியன் வங்கிக் கணக்கை top-up செய்து கொள்ளலாம். app ஊடாக யூனியன் வங்கிக் கணக்கு தகவல்களில் மாற்றம் செய்யப்பட்ட பணத்தின் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

இந்த app மற்றும் JustPay உள்ளம்சம் என்பது சகல யூனியன் வங்கி கணக்குதாரர்களுக்கும் கிடைக்கும். ஏற்கனவே UBgo ஐ பயன்படுத்தும் பாவனையாளர்கள், Top Up and go வசதியை பயன்படுத்த, தமது app ஐ மேம்படுத்திக் (upgrade) கொள்ள வேண்டும். இந்த உள்ளம்சம் தொடர்பில் மேலதிக விவரங்களை அறிந்து கொள்ள அல்லது யூனியன் வங்கி மொபைல app க்கு பதிவு செய்து கொள்ள, யூனியன் வங்கி கணக்குதாரர்கள் வங்கியின் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் இலக்கமான 0115 800 800 ஊடாக தொடர்பு கொள்ளலாம் அல்லது வங்கியின் கூட்டாண்மை இணையத்தளமான www.unionb.com ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC