வங்கி
- வரிக்கு பிந்திய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3% இனால் அதிகரித்து ரூ. 710 மில். ஆக பதிவு
- தேறிய வட்டி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6% இனால் அதிகரித்து ரூ. 4,479 மில். ஆக பதிவு
- மொத்த தொழிற்படு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9% இனால் அதிகரித்து ரூ. 6,021 மில். ஆக பதிவு
- உறுதியான ஐந்தோகை மற்றும் மொத்த மூலதன போதுமை விகிதம் 75% ஆக பதிவு
குழுமம்
- வரிக்கு பிந்திய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4% இனால் அதிகரித்து ரூ. 804 மில். ஆக பதிவு
- தேறிய வட்டி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில்2% இனால் அதிகரித்து ரூ. 5,234 மில். ஆக பதிவு
- மொத்த தொழிற்படு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில்5% இனால் அதிகரித்து ரூ. 6,916 மில். ஆக பதிவு
- மொத்த மூலதன போதுமை விகிதம்36% ஆக பதிவு
2019 ஆம் ஆண்டில் சவால்கள் நிறைந்த பொருளாதார சூழல்கள் நிலவிய போதிலும், யூனியன் வங்கி வரிக்கு பிந்திய இலாப பெறுமதியை 50% இனால் அதிகரித்திருந்தது. தொடர்ச்சியாக துறைசார் ரீதியில் நிலவிய சவால்கள் நிறைந்த சூழலும், தனது இலாகா மீளமைப்பு மற்றும் முறையான செலவு முகாமைத்துவ செயற்பாடுகளினூடாக இந்த வளர்ச்சியை யூனியன் வங்கி பதிவு செய்திருந்தது. வருடத்தில், தனது இலாபத்தில் 66% பகுதியை வரியாக செலுத்தியிருந்தது. இது 1 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையாகும்.
பிரதான வங்கியியல் வளர்ச்சி மற்றும் இலாபகரத்தன்மை
சந்தை சவால்கள் காணப்பட்ட போதிலும், வங்கியின் பிரதான வங்கியியல் செயற்பாடுகள் தொடர்ந்தும் சிறப்பான பெறுபேறுகளை பதிவு செய்திருந்ததுடன், இதில் கூட்டாண்மை, சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் மற்றும் சில்லறை வங்கியியல் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த மூலோபாய நடவடிக்கைகள், சிறந்த திறைசேறி பெறுபேறுகள் போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன. பிரதான வங்கியியல் செயற்பாடுகளை முறையாக திட்டமிட்டு நிறைவேற்றியிருந்தமை காரணமாக, வங்கியின் தேறிய வட்டி வருமானம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்து ரூ. 4,479 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22.6% வளர்ச்சியாகும்.
ஆண்டின் தேறிய வட்டி எல்லைப் பெறுமதி (NIM) 3.6% ஆக பதிவாகியிருந்தது. அலகுகள் மீதான முதலீடுகளிலிருந்து பெறப்பட்ட வருமதிகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தால் இந்த காலப்பகுதிக்கான NIM பெறுமதி 3.8% அதிகரிப்பை பதிவு செயதிருக்கும். அலகுகள் மீதான முதலீடுகளிலிருந்து வருமானம் ரூ. 227 மில்லியனாகும். இது ”தேறிய நேர்மை பெறுமதி வருமதிகள்/(இழப்புகள்)” என்பதில் மூலதன ஆதாயமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
நாணய கொள்கைகள் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டிருந்த போதிலும், தனியார் துறைக்கான கடன் அதிகரிப்பு மந்த கதியில் காணப்பட்டதுடன், ஐந்தொகை வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பிரிவு ரூ. 77,358 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், ரூ. 3,609 மில்லியனாக உயர்ந்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4.9% அதிகரிப்பாகும். சில்லறை பிரிவில் கடன்கள் மூலமாக பெறப்பட்ட பங்களிப்புகளினூடாக இந்த அதிகரிப்பை அவதானிக்க முடிந்தது. இதில் கடன் அட்டைகள் பிரிவு மற்றும் கூட்டாண்மை கடன்கள் பிரிவு அதிகரிப்பு போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன.
வங்கியின் வைப்பு இருப்பு வருடத்தின் இறுதியில் ரூ. 76,532 மில்லியனாக பதிவாகியிருந்தது. குறைந்த செலவு வைப்புகளை கையகப்படுத்துவதில் வங்கியின் மூலோபாய கவனம் காணப்பட்டதுடன், வைப்பு இருப்பின் மீளமைவுக்கு இது காரணமாக அமைந்தது. CASA (நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குகள்) வளர்ச்சி வருடம் முழுவதிலும் தொடர்ந்திருந்தது. இதன் பெறுபேறாக, வருட இறுதியில் CASA இருப்பு ரூ. 19,332 மில்லியனாக உயர்ந்தது. சராசரி இலாகா வளர்ச்சி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16% வளர்ச்சி என்பதுடன் வங்கியின் CASA Mix 25% ஆக உயர்வடைந்தது.
வருடம் முழுவதிலும் கட்டண வருமானம் தொடர்பில் வங்கியினால் முறையாக திட்டமிடப்பட்ட செயற்பாடுகளினூடாக, தரகு மற்றும் கட்டண வருமானம் ரூ. 101 மில்லியனால் அதிகரித்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.5% வளர்ச்சியாகும். பாங்கசூரன்ஸ் கட்டணங்கள் மற்றும் உத்தரவாதங்கள் வருமானத்தினூடாக வலுவூட்டப்பட்ட செயற்பாடுகள் மற்றும் கடன் அட்டைகள் மீதான கையகப்படுத்தல் முயற்சிகள் போன்றவற்றினால் இந்த பிரிவுக்கு பெருமளவு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது. 2019 ஆம் ஆண்டு முழுவதிலும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வியாபாரங்களில் ஏற்பட்ட சரிவு காரணமாக, வியாபார வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியினால், கட்டண வருமானம் என்பது பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது.
தேறிய வர்த்தக மற்றும் இதர வருமானம் ரூ. 686 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.2% வீழ்ச்சியாகும். பரிமாற்ற வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி இதில் பங்களிப்பு செலுத்தியிருந்தது. வங்கியின் திறைசேரி பிரிவு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்ததுடன், 89.4% மூலதன அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. இது ரூ. 446 மில்லியனாக பதிவாகியிருந்தது. அலகுகளின் மீதான முதலீடுகளிலிருந்தான வருமானம் மாற்றமின்றி ரூ. 227 மில்லியனாக காணப்பட்டது. இதர தொழிற்படு வருமானம் ரூபாய் மதிப்பிறக்கம் மற்றும் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நிதியிடல் மாற்றீடுகள் காரணமாக 96.2% இனால் சரிவடைந்திருந்தது. பாரிய பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக வர்த்தக அளவுகளில் வீழ்ச்சி பதிவாகியிருந்ததுடன், ஒட்டுமொத்த வர்த்தக வருமானத்தில் வீழ்ச்சியை பதிவு செய்ய பங்களிப்பு வழங்கியிருந்தது. ஐந்தொகை தினத்தன்று வங்கி வியாபார பங்குகள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், பங்கு நிதியங்கள் எதிலும் முதலீடு செய்திருக்கவில்லை. பிரதான வங்கியியல் செயற்பாடுகளில் வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான நிதி பெறுபேறுகள் போன்றன தேறிய வட்டி வருமானம் அதிகரிப்பு ஏற்படுவதில் பங்களிப்பு வழங்கியிருந்தன. மொத்த தொழிற்படு வருமானம் 13.9% வளர்ச்சியை பதிவு செய்து, ரூ. 6,021 மில்லியனாக பதிவாகியிருந்தது. 2019 ஆம் ஆண்டில் மொத்த தொழிற்படு வருமானத்தில் 51% ஐ சில்லறை மற்றும் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை பிரிவுகள் வழங்கியிருந்தன.
பாரிய பொருளாதார சவால்களை பிரதிபலிக்கும் வகையில், வங்கியின் தொழிற்படா கடன்கள் (NPL) விகிதம் 2019 ஆம் ஆண்டில் 5.03% ஆக அதிகரித்திருந்தது. வருடத்தில் தொழிற்படா கடன்கள் விகிதத்தில் அதிகளவு உயர்வை சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் பிரிவு பதிவு செய்திருந்தது. ஆண்டுக்கான வலுக்குறைப்பு கட்டணம் ரூ. 390 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.0% அதிகரிப்பாகும்.
வங்கியின் தொழிற்படு செலவீனங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.7% அதிகரித்து ரூ. 3,830 மில்லியனாக பதிவாகியிருந்தது. மதிப்பிறக்கம் மற்றும் கடன் தீர நிதி சேர்த்தல் மற்றும் சொத்துக்கள் பாவனைக்கான உரிமை ஆகியவற்றுடன் இதர செலவீனங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2% அதிகரித்து ரூ. 1,947 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கி SLFRS 16 ”லீஸ்கள்” ஐ 2019 ஜனவரி 1ஆம் திகதி முதல் பின்பற்றியிருந்தது. முன்னைய கணக்கீட்டு நியமமான LKAS 17 இன் பிரகாரம் ஒப்பீட்டு பெறுமதிகள் கணிப்பீடு செய்யப்பட்டிருந்தன. அதற்கமைய, சொத்துக்களை பயன்படுத்தும் உரிமை ஐந்தொகையில் உள்ளடக்கப்பட்டதுடன், மதிப்பிறக்கங்களில் தொடர்புடைய கடன் தீர நிதி சேர்ப்புகள் உள்வாங்கப்பட்டதுடன், வாடகை செலவுகளுக்கு பதிலாக மதிப்பிறக்கம் 2018 இல் ஏனைய செலவுகளில் உள்ளடக்கப்பட்டிருந்தன. குத்தகை கடப்பாட்டுக்கான நிதி செலவாக வட்டி செலவீனம் ஒரு பகுதியாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
வங்கியின் வருமானத்துக்கான செலவு விகிதம் 2018 இல் பதிவாகியிருந்த 71% இலிருந்து 64% ஆக பதிவாகியிருந்தது. 2019 இல் வங்கியின் பிரதான மைல்கல் சாதனையாக இது அமைந்திருந்தது. தொழிற்படு எல்லை பெறுமதி ரூ. 2,191 மில்லியனாக அதிகரித்திருந்ததுடன், இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41% அதிகரிப்பாகும். வருமானம் வேகமாக 13.9% அதிகரிப்பையும் செலவுகள் 2.7% அதிகரிப்பையும் பதிவு செய்திருந்தமை இதற்கு காரணியாக அமைந்திருந்தது. இதனூடாக சிறந்த வருமானம் மற்றும் செலவு முகாமைத்துவம் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், வங்கியின் உற்பத்தித்திறன் மற்றும் தொழிற்பாட்டு வினைத்திறன் ஆகியவற்றில் மேம்பாட்டையும் பதிவு செய்திருந்தது.
முதலீட்டாளர்களுக்கான பங்கின் மீது பகிரப்பட்ட இலாபம் ரூ. 104 மில்லியனாக பதிவாகியிருந்தது, இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ. 69.2 மில்லியன் அதிகரிப்பாகும். வங்கியின் துணை நிறுவனங்களான UB ஃபினான்ஸ் இந்த அதிகரிப்பில் பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்தது.
ஆண்டுக்கான இலாபம் ரூ. 710 மில்லியனாகும், 2018 இல் இந்த பெறுமதி ரூ. 473 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 50.3% அதிகரிப்பாகும். ஆண்டுக்கான ஏனைய பரிபூரண வருமானம் ரூ. 346 மில்லியனாகும், அரசாங்க முறிகளில் ஏற்பட்ட மதிப்பீட்டு தாக்கம் நிதி முதலீடுகளில் நேர்த்தியான பெறுமதிகளில் பட்டியலிடப்பட்டிருந்தமை காரணமாக இந்த பெறுமதி பதிவாகியிருந்தது. ஆண்டில் நிலவிய சாதகமான சந்தை பெறுமதி நகர்வுகள் இதற்கு காரணமாக அமைந்திருந்தது.
குறித்த ஆண்டில் வங்கி துரித மூலதன போதுமை விகிதத்தை கொண்டிருந்ததுடன், 16.75% ஐ பிரதான மூலதன விகிதமாக வருட நிறைவில் பதிவு செய்திருந்தது.
வங்கி மற்றும் இரு துணை நிறுவனங்கான UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் நாமல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியவற்றைக் கொண்ட குழுமம், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50.4% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 804 மில்லியன் ரூபாயை இலாபமாக பதிவு செய்திருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 129,840 மில்லியனாகும். குழுமத்தின் ஐந்தொகையில் 93.8% ஐ வங்கி கொண்டிருந்தமையின் காரணமாக, குழுமத்தின் மொத்த நிதிப் பெறுபேறுகளில் வங்கியின் பெறுபேறுகள் ஆதிக்கம் செலுத்தியிருந்தது.
சவால்களிலும் நிலையான வியாபார வளர்ச்சியை தக்க வைத்திருந்தமை
2019 ஆம் ஆண்டில் பாரிய பொருளாதார சவால்கள் நிலவிய போதிலும், வங்கியின் பிரதான வியாபார செயற்பாடுகள் தொடர்ந்தும் வளர்ச்சியை பதிவு செய்திருந்தன.
கூட்டாண்மை, சிறிய, நடுத்தரளவு வியாபார முயற்சிகள் மற்றும் சில்லறை வங்கியியல் பிரிவுகள் போன்றன வங்கியின் விரிவாக்கல் செயற்பாடுகளில் முக்கிய பங்கை வகித்திருந்ததுடன், தெரிவு செய்யப்பட்ட கையகப்படுத்தல் மூலோபாயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. பாரிய பொருளாதாரத்தில் சவால்கள் காணப்பட்ட போதிலும், 2019 ஆம் ஆண்டில் திறைசேரி பிரிவு சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. குறிப்பிடத்தக்களவு மூலதன வருமதிகள் மற்றும் கட்டணம் மற்றும் தரகு வருமானத்தினூடாக வங்கியின் வருமானத்தில் பங்களிப்பு செலுத்தியிருந்தது. சாதகமற்ற சந்தை சூழ்நிலைகள் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை துறையில் பாரியளவு தாக்கத்தை பதிவு செய்திருந்தன. இந்த துறைக்கு யூனியன் வங்கி தனது உதவியை வழங்கியிருந்ததுடன், நீண்ட கால அடிப்படையிலான நிதி முதலீட்டு தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழிற்துறைகள் எதிர்கொண்டிருந்த சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், வங்கியினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தமது செயற்பாடுகளை மீளக் கட்டியெழுப்பிக் கொள்வதற்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. முறையான இலாகா விளைவுகள் நிர்வாகத்தினூடாக கூட்டாண்மை வங்கியியல் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. புதிய கையகப்படுத்தல்கள் மற்றும் இனங்காணப்பட்ட பிரிவுகளில் அதிகளவு பகிர்வுகள் போன்றவற்றினால் வலுவூட்டப்பட்டிருந்தது. வங்கியின் கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டும் நடவடிக்கைகளை Union Bank BizDirect முன்னெடுத்திருந்தது. பிரிவின் சிறந்த நிதி முகாமைத்துவ சௌகரியங்களுக்கு உதவியிருந்தது. நிதி முகாமைத்துவ சிறப்பை வழங்குகின்றமைக்காக கௌரவிக்கும் வகையில், யூனியன் வங்கிக்கு ”இலங்கையின் சிறந்த நிதி முகாமைத்துவ வங்கி” எனும் விருது குளோபல் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் 2019 இல் வழங்கப்பட்டிருந்தது,
வங்கியின் கடன் வளர்ச்சியில் சில்லறை வங்கியியல் பிரிவு தொடர்ச்சியாக பங்களிப்பை வழங்கியிருந்தது. அடைமானத்தின் பின்புலத்திலமைந்த கடன்கள் மற்றும் கடன் அட்டை விநியோகம் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டமை போன்றனவும் பங்களிப்பு வழங்கியிருந்தன. வங்கியின் கிளைகளில் மற்றும் தெரிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர் பிரிவுகளில் இலக்கு வைக்கப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வங்கியின் நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குகள் மற்றும் வைப்புகள் வளர்ச்சியில் பங்களிப்பு வழங்கியிருந்தன. தொழில்நுட்ப மேம்படுத்தல்களினூடாக வாடிக்கையாளர் சௌகரியங்களை மேம்படுத்துவது என்பதில் யூனியன் வங்கியின் கவனம் செலுத்தியிருந்தமை 2019 இல் மேலும் முன்னேற்றம் கண்டிருந்தது. மாற்று நாளிகைகளினூடாக சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், இதில் ATM வலையமைப்பு மற்றும் டிஜிட்டல் வங்கியியல் கட்டமைப்புகள் போன்றன அடங்கியிருந்தன. வங்கியின் மொபைல் வங்கியியல் அப்ளிகேஷன் மேலும் மேம்படுத்தப்பட்டிருந்ததுடன், புதிய உள்ளம்சங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது. கடன் அட்டைகளுக்கான சுய பராமரிப்பு சேவைகள் பாவனையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன. 2019 ஆம் ஆண்டில் யூனியன் வங்கி தனது புதிய கூட்டாண்மை இணையத்தளத்தை அறிமுகம் செய்திருந்தது. புதிய தோற்றத்தில் மேம்படுத்தப்பட்ட உள்ளம்சங்களுடன் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வங்கியின் டிஜிட்டல் பிரசன்னத்தை மேம்படுத்தும் வகையில் இந்த தளம் அமைந்துள்ளது. புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட யூனியன் வங்கியின் இணையத்தளத்துக்கு அமெரிக்காவில் இடம்பெற்ற 2019 dotCoMM விருதுகள் வழங்கலில் நிதியியல் பிரிவின் கீழ் தங்க விருதை பெற்றுக் கொண்டது.
ஆண்டில் வாடிக்கையாளர்களை ஈடுபடுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதனூடாக வாடிக்கையாளர்கள் உறவுகள் பேணப்பட்டிருந்தன. இதில், பிரதம நிறைவேற்று அதிகாரியின் காலை ஆகார அமர்வு (CEO Breakfast Forum) முக்கியமானதாக அமைந்திருந்தது. வெவ்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இதில் பங்கேற்று பெருமளவு உள்ளம்சங்களை பெற்றுக் கொண்டனர். மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட வருடத்தில் வங்கி மேலும் பல நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர்கள் மற்றும் கல்வி தொடர்பில் கவனம் செலுத்தி, கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் தெரிவு செய்யப்பட்ட வங்கிக் கிளைகள் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. வசதி வாய்ப்புகள் குறைந்த பாடசாலைகளை மேம்படுத்துதல் மற்றும் இந்த பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்விச் செயற்பாடுகளை தொடர சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றன இந்த நடவடிக்கைகளில் அடங்கியிருந்தன.
2019 ஆம் ஆண்டில் யூனியன் வங்கியின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ”சவால்கள் நிறைந்த வருடத்தில் யூனியன் வங்கியின் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்ய முடிந்தமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். பாரிய நிதிச் சவால்கள் நிறைந்த காலப்பகுதியில், வங்கி தனது பிரதான வங்கியியல் வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், வட்டி வருமானம், இலாகா மீளமைப்பு மற்றும் முறையான செலவு முகாமைத்துவம் போன்றவற்றில் அதிகளவு கவனம் செலுத்தியிருந்தது, யூனியன் வங்கி 2020 இல் தனது 25 வருட பூர்த்தியை கொண்டாடுகின்றது. கடந்த காலங்களில் நாம் வெற்றிகரமாக செயலாற்றி கடந்து வந்த பயணத்தின் முக்கியமான ஆண்டில் தற்போது உள்ளோம். 2020 ஆம் ஆண்டில், வங்கியின் மத்திய தவணை வளர்ச்சி மூலோபாயம் என்பது இலக்கு வைக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். 2020 ஆம் ஆண்டில் வியாபாரச் சூழல் மேம்படும் என எதிர்பார்ப்பதுடன், வங்கி தனது சில்லறை, கூட்டாண்மை மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை மற்றும் திறைசேரி வியாபாரங்கள் அதன் தெளிவான போட்டிகர வாய்ப்புகளை பயன்படுத்தி, நிலைபேறான வருமானங்களை உருவாக்கும். மூலோபாய வளர்ச்சி பிரிவுகளில் கவனம், கடுமையான மூலோபாய விரிவாக்கங்கள் மற்றும் உள்ளார்ந்த வங்கியியல் வழிமுறைகள் ஆகியன 2020 ஆம் ஆண்டில் யூனியன் வங்கியின் வளர்ச்சிக்கு வழிகோலுவதாக அமைந்திருக்கும்.” என்றார்.

